வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி – அமைச்சர் பதில்!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் உரிமைகள், சட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகியவை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) எழுத்து மூலம் பதிலாளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகள் குறித்தும் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் சொல்லித்தரப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

பறவைகளால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்’- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர்!

சட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும், உரிமைகள் குறித்தும் ஊழியர்களின் அவரவர்கள் தாய்மொழியிலேயே SIP என்னும் வகுப்புகள் மூலம் சொல்லித்தரப்பட்டுள்ளது என்றார்.

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எவ்வாறு உதவி நாடுவது, யாரை அணுகுவது போன்றவைகளும் அந்த வகுப்புகளின் மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் உதவிகளை நாடுவதற்கு அவசர உதவித் தொலைபேசி எண்கள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் தங்கும் விடுதிகளில் மனநல ஆலோசனை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், மனிதவள அமைச்சகம் சில அமைப்புகளுடன் இணைந்து துன்புறுத்தலால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் பணிப்பெண்களுக்கு இலவசமாக உதவிகள் வழங்கி வருவதாகவும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலி வீட்டுக்குள் நுழைந்து நகைகள், ரொக்கம் திருட்டு… 27 வயதான நபருக்கு சிறை!