வெளிநாட்டு கட்டுமான ஊழியர் கடை புகுந்து திருட்டு… பொருளாதார பிரச்சனையால் எடுத்த விபரீதம் முடிவு – சிறையில் அடைப்பு

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் கடை புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக யாஹூ செய்தி வெளியிட்டுள்ளது.

அங் மோ கியோ MRT நிலையத்தில் அமைந்துள்ள பேக்கரியில் ரொட்டித் துண்டுகள் மற்றும் ரொக்க பணத்தையும் அவர் திருடியதாக புகார் செய்யப்பட்டது.

புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!

இந்நிலையில், கடை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக குற்றத்தை மார்ச் 22 அன்று அவர் ஒப்புக்கொண்டார்.

வியட்நாம் நாட்டை சேர்ந்த அவருக்கு தற்போது 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

அந்த கடையின் விவரங்களை நன்கறிந்தவர் அவர், ஏனெனில் இதற்கு முன்பு அந்த பேக்கரியில் அவர் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மணிநேரங்களுக்கு கடையின் பின்கதவு பூட்டாமல் இருக்கும் என்ற ரகசியம் அவருக்கு தெரியும், எனவே கடையில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருவுட்டில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்றது.

கைகளில் பிளாஸ்டிக் பைகளை அணிந்து, கைரேகைகள் படாமல் இருக்க ஊழியர் தெளிவாக இந்த திருட்டை செய்துள்ளார்.

அன்றைய தினமே போலீசார் ஊழியரை கைது செய்தனர். 33 வயதான அவருக்கு வறுமை, பொருளாதார பிரச்சினை இருந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!