வெளிநாட்டு ஊழியர்களில் எத்தனை பேர் மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.? – அமைச்சர் பதில்!

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் மோசடி சம்பவங்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எழுத்துபூர்வ பதிலை அளித்தார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மோசடி சம்பவங்கள் மூலம் 17.3 விழுக்காடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Work Permit அனுமதியை புதுப்பிக்கும் விண்ணப்பங்கள் குறித்து மனிதவள துணை அமைச்சர் பேச்சு!

சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டில் 23,931 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியது என்றும், அவற்றில் வெளிநாட்டு ஊழியர்களை பொறுத்தவரையில், 15.5 விழுக்காடு வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரும், 0.2 விழுக்காடு நீண்டகாலப் பயண அட்டை வைத்திருப்போரும், S Pass அனுமதியில் இருப்போர் 1.6 விழுக்காட்டினரும் மோசடி சம்பவங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வெளிநாட்டு ஊழியர்களிடம் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மோசடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் மனிதவள அமைச்கம் அவர்கள் பேசும் மொழிகளிலேயே மொழிபெயர்த்து வழங்குகின்றது.

மேலும், நாட்டில் மோசடி சம்பவங்களுக்கு எதிரான ஆலோசனைகளை வழங்குவதிலும் தகவல்களைப் பரிமாறுவதிலும் அமைப்புகள், தங்கும் விடுதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள், தூதரகங்கள் ஆகியவற்றுடன் காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகின்றது.

சிங்கப்பூர் நாடாளுமன்றதில் அயர்ந்து தூங்கிய அமைச்சர் – நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் வீடியோ காட்சி!