சிங்கப்பூர் நாடாளுமன்றதில் அயர்ந்து தூங்கிய அமைச்சர் – நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் வீடியோ காட்சி!

திங்கள்கிழமை (ஏப்ரல் 4) சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எரிபொருள் வரியை குறைக்கப்படுவது பற்றியும், சாலை வரி தள்ளுபடி பற்றியும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் பேசியபோது, ​​ மூத்த அமைச்சர் தியோ சீ ஹீன் தூங்கிய நிலையில் இருந்தார்.

காணொளி முழுவதும், அமைச்சர் பலமுறை தூங்கி கிடப்பதைக் காணமுடிந்தது. அவரது கண்கள் அரிதாகவே திறந்தன.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறங்கியது இதுவெ முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு, சுற்றுச்சூழலுக்கான மூத்த அமைச்சர் அமி கோர், 20 வினாடிகள் கொண்ட வீடியோவில், நாடாளுமன்றத்தில் உறக்கநிலையில் இருப்பது கேமராவில் சிக்கியது.

செப்டம்பர் 17 அன்று ஃபேஸ்புக்கில் ஒரு பிலிப் ஆங் பகிர்ந்த வீடியோ கிட்டத்தட்ட 500 பகிர்வுகளையும் 283 எதிர்வினைகளையும் பெற்றது.

இதேபோல், 2020 ஆம் ஆண்டில், அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்ற அமர்வின் போது தூங்குவது போல் தோன்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

6 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், அப்போதைய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  தூங்கி கிடப்பது போல் தோன்றி, பல இணையவாசிகளின் கோபத்தைப் பெற்றார்.

பிப்ரவரி 18 அன்று, துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 2020 பட்ஜெட்டை வெளியிடும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது.