வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த தடை – நிறுவங்களுக்கு இனி கடும் நடவடிக்கை தான்: MOM அதிரடி

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த நிறுவனம் ஒன்றுக்கு மூன்று மாத கலாம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

waterproofing contractor ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 8 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கூரை வழியாக கீழே விழுந்தார்.

Work permit இல்லை, பொழுதுபோக்கு சேவை: சிங்கப்பூரில் ஆண், பெண் உட்பட 31 பேர் கைது

இதனால் அவருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அவர் Le Fong Building Services நிறுவனத்தின் ஊழியர் ஆவார், கூரையில் கால் வைத்ததில் அது உடைந்து அவர் கீழே விழுந்தார்.

கடுமையாக கீழே விழுந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் MOM பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேலையிடத்தை MOM ஆய்வு செய்து இந்த அதிரடி உத்தரவு வெளியிட்டுள்ளது.

ஆறு மாத கால உயர்தர பாதுகாப்பு நடைமுறையின் கீழ் செப். 1 முதல் 2023 பிப்ரவரி 28 வரை பாதுகாப்பு முடிக்கிவிடப்பட்டுள்ளது.

அதன் கீழ், முதன் முதலாக கடும் நடவடிக்கைகளுக்கு உட்பட்ட முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.