Work permit இல்லை, பொழுதுபோக்கு சேவை: சிங்கப்பூரில் ஆண், பெண் உட்பட 31 பேர் கைது

work permit middle-road-police-raid
SPF/Google

Work permit இல்லை, Hostessing பொழுதுபோக்கு சேவைகளை வழங்கியதாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 29 மற்றும் 33 வயதுக்குட்பட்ட 29 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரு ஆடவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

“எங்களுக்கு லாபம் முக்கியம்”… ஊழியர்களுக்கு வேலை இல்லை – ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்

அந்த சேவைகளை வழங்கியது, Work permit முறையாக இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 மற்றும் 35 வயதுடைய அந்த இரு ஆடவர்கள், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பொழுதுபோக்கு நிலையங்களும் பொது பொழுதுபோக்குச் சட்டம் 1958க்கு முரணாக செயல்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஐசிபி எண்டர்பிரைஸ் ஹவுஸ் அருகே பெண்களை போலீசார் கைது செய்வதையும் அந்த புகைப்படம் வாயிலாக காண முடிகிறது.

Work permit இல்லாமல் வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு எடுப்பது சட்டப்படி தவறு. இந்த குற்றம் நிரூபணமானால் S$5,000 முதல் S$30,000 வரை அபராதம், 12 மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு சிறை – வாகனம் ஓட்ட 10 ஆண்டு தடை