வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கார் மோதல் – 22 பேர் மருத்துவமனையில்..

foreign workers bus accident
22 taken to hospital after car and bus carrying foreign workers collide on Jurong Island (PHOTO: ROADS.SG/FACEBOOK)

இன்று (டிசம்பர் 6) காலை ஜுராங் தீவில், பேருந்து கார் மீது மோதியதில் மொத்தம் 21 வெளிநாட்டு ஊழியர்கள் என்று நம்பப்படும் பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் 3 மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் தற்போதைய நிலவரம்!

மேலும், 42 வயதான கார் ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 22 பேரும் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஜுராங் தீவு பகுதியில், ஜுராங் தீவு நெடுஞ்சாலையின் முடிவில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இது குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

மேலதிக தகவலுக்கு இணைப்பில் இருங்கள்…

கடை முன்னே ஒன்றுகூடிய பொதுமக்கள்.. கடையை தற்காலிகமாக மூட உத்தரவு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…