விடுதிகளுக்குள் பண்டிகை கொண்டாட்டம்: “குடும்பத்தை பார்த்து பல ஆண்டுகள் ஆச்சு” – ஏக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

Pic: Ili Nadhirah Mansor/TODAY

தீபாவளி பண்டிகை தினத்தில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் பண்டிகையை விடுதிகளுக்குள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஒரே அறையில் சக ஊழியர்களுடன் உணவு சமைத்து, அதனை உண்டு மகிழ்ந்து தங்களில் பண்டிகை தினத்தை கழித்தனர்.

“அதிக உணவை வாங்க முடியவில்லை, மிகக் குறைவாகவே சமைத்தோம்” – தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்

வெஸ்ட்லைட் மாண்டாய் விடுதியில், திரு கார்த்திகேயன் என்ற ஊழியர் தீபாவளி பண்டிகை குறித்து கூறுகையில்; அவரும் மற்றும் அவரது சக ஊழியர்கள் மூவரும், ஒன்றாக நண்டு, மீன் மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை பகிர்ந்து உண்டு தீபாவளியைக் கொண்டாடினர்.

சுமார் 13 ஆண்டுகளாக சிங்கப்பூரில் அவர் பணிபுரிவதாக கூறியுள்ளார், இந்திய ஊழியரான அவர் தமிழ்நாட்டில் உள்ள தனது பெற்றோரை ஆறு ஆண்டுகளாக பார்க்கவில்லை என்றும் கூறினார்.

இதுபோன்ற பண்டிகை காலங்களில், “அவர்களை தவற விடுவதாகவும், விரைவில் அவர்களைப் பார்க்க சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

அனுமதி பெற்ற குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

தீபாவளி சிறப்பு பிராத்தனையில் இந்திய ஊழியர்களும் கலந்துகொண்டனர். காலை 7 மணி முதல் மதியம் வரை பிராத்தனை நடைபெற்றது.

“வெளியில் நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி; இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது” – வெளிநாட்டு ஊழியர்கள்