வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள்

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது - தெரிந்துகொள்ளுங்கள்
(Photo: Reuters/Edgar Su)

வேலை பார்த்துக்கொண்டு லாரியும் ஓட்டும் ஊழியர்களுக்கு 12 மணிநேர வேலை என்ற வரம்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.

அதற்கு தனது பதிலை எழுத்துபூர்வமாக சொன்ன மனிதவள அமைச்சர் டான் சீ லெங், அவர்கள் வேலை நியமன சட்டம் பகுதி 4கின் கீழ் வருவதாக கூறினார்.

டோட்டோ லாட்டரியில் பிரம்மாண்ட முதல் பரிசு S$12,979,820 – தட்டி சென்ற 4 பேர்.. அதில் ஒருவர் S$1 டிக்கெட் வாங்கியவர்

அந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கான வேலை நேரம், ஓய்வு நாள் மற்றும் நிபந்தனைகளை அறிந்துகொள்ள முடியும்.

அதில் கூறப்பட்டது போல, லாரி ஓட்டும் நேரத்தையும் சேர்த்து அவர்களுக்கான வேலை நேரம் 12 மணி நேரம் ஆகும்.

தொடர்ந்து 6 மணிநேரம் வேலை செய்யக்கூடாது, ஓய்வு முக்கியம், இந்த வகைப்பாட்டில் உள்ள ஊழியர்கள் லாரியை இயக்கும் முன்னர் குறைந்தது 30 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பெதெல்லாம் அதில் சொல்லப்பட்ட விதிகள்.

முதலாளிகள் அதனை அனுமதிக்க வேண்டும் எனவும் விதியும் அதில் உள்ளது.

ஊழியர்கள் களைப்படையாமல் இருக்க தேவையான அனைத்தையும் முதலாளிகள் செய்துகொடுக்க வேண்டும்.

அதாவது லாரி ஓட்டுநருக்கு 2 மணிநேரத்துக்கு 15 நிமிடம் என்ற அளவில் ஓய்வு அளிக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கோவிலில் பெண்ணை அறைந்து, இழிவாக பேசி.. ஆடவர் ஒருவரை தமிழில் மோசமாக திட்டிய இந்தியர்