சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரவுள்ள மாற்றங்கள் – முழு விவரம்!

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இன்று முதல் (மார்ச் 15) சமூக இடங்களுக்கு செல்ல முடியும்.

சமூக இடம்

வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 15,000 வரை வார நாட்களில் சமூக பொது இடத்திற்கு செல்லலாம்.

குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

கூடுதலாக, வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது 30,000 வரை அதிகரிக்கப்படும்.

சமூக இடங்களுக்கு செல்லும் அவர்கள் 8 மணி நேரம் வரை அங்கு இருக்க முடியும்.

சுட்டெரிக்கும் வெயில்…வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? – அதிரடி ஆய்வு.!

விளையாட்டு

மேற்பார்வையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களில் அமைந்துள்ள விளையாட்டு இடங்களில் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 ஊழியர்கள் வரை ஒரே நேரத்தில் விளையாடலாம்.

விண்ணப்பிக்க வேண்டும்

கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பிரபலமான இடங்களுக்கு செல்லும் முன்னரே முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!