சுட்டெரிக்கும் வெயில்…வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? – அதிரடி ஆய்வு.!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சிங்கப்பூரில் பணிபுரியும் கட்டுமான ஊழியர்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் வெப்ப அழுத்தத்திற்கு எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த புதிய ஆய்வை ஒன்றை சிங்கப்பூரின் அறிவியலாளர்கள் அடுத்த மாதம் நடத்தவுள்ளார்கள்.

கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட Project HeatSafe என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தையும், வேலை உற்பத்தித்திறனையும் உயரும் வெப்பநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறியும் இந்த ஆய்வுத் திட்டம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வில், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 40 ஊழியர்களின் முக்கிய வெப்பநிலையும், வெப்ப தேவைகளும் அவர்கள் வேலை செய்யும்போது கண்காணிக்கப்படும் என்றும், இது ஊழியர்களின் வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, தடுக்க அறிவியலாளர்கள் தீர்வுகளை முன்மொழிய வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!

பகலில் கட்டடங்கள் நிறைந்த பகுதிகளில் சேரும் வெப்பம் இரவு நேரத்தில் வெளியாகிறது. ஊழியர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்களா, அதை எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் ஆராய்ச்சியாளர்கள் முனைவார்கள். ஊழியர்கள் தங்குமிடங்களில் எப்படி ஓய்வெடுக்கிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவில்லை என்றால், அது அவர்களின் ஒட்டுமொத்த வெப்ப அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஒவ்வொரு வேலை நாளிலும் அவர்களின் தொடக்கநிலை எவ்வாறு உள்ளது என்பது முக்கிய ஒன்று என்கிறார் பேராசிரியார் லீ.

சிங்கப்பூரின் அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வின் முடிவுகளை வைத்து, ஊழியர்கள் வெப்பத்தை சாமளிப்பதற்கும், வெப்ப அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கவும் தீர்வுகளை குழு முன்மொழியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் அதிக வெப்பநிலையையும், அதிக வெப்ப அலைகளையும் எதிர்காலத்தில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!