சிங்கப்பூரில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!

Photo: the world and then some.com

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு, அனைவரும் பங்குபெற்று மகிழ்ச்சியடைவதற்காக வெளிநாட்டு ஊழியர் தொடர்பு கூட்டணி (AGWO) அமைப்பு, சிங்கப்பூர் மனிதவள அமைச்சுடன் ஒன்றிணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சி சிங்கப்பூரின் துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்றது. இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி முழுக்க முழுக்க கோவிட்-19 தொற்றுப் பரவலினால் பெரும் நெருக்கடிக்குள்ளான வெளிநாட்டு ஊழியர்களுக்காகவே நடத்தப்பட்டது.

பணம் அனுப்பும் சேவையில், பல்வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்ப சிங்டெல் புதுத் திட்டம்!

சிங்கப்பூரில் வேலைப் பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இலவச முடித்திருத்தச் சேவை, புகைப்பட அரங்கங்கள் மற்றும் மனநலனை நிதனாப்படுத்தி உத்வேகம் அடைய செய்வதற்கு சில சிறப்புரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

மேலும் இதில் இசை, நடனம், ரங்கோலிப் போட்டிகள் என்று பல போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் பரிசளிக்கப்பட்டது.

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்த இந்த 4 நாள்களில் சுமார் 2,500 பேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்து தீபாவளி கொண்டாட்டத்தை கொண்டாடிய அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.

மேலும் பல்வேறு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, நிகழ்ச்சி நடைப்பெற்ற இந்த 4 நாட்களில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட உணவு பார்சல்கள் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்கள், மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள அறிவிப்பு!