வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி, டாக்சி மோதி கடும் விபத்து: ஊழியர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

foreign workers ferry lorry taxi accident
Singapore Roads Accident/Facebook and TikTok/manhunt2k

மத்திய விரைவுச்சாலையில் (CTE) வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி மற்றும் டாக்சி நேற்று முன்தினம் (மே 22) மாலை விபத்துக்குள்ளானது.

அதன் காரணமாக ஒரு பாதையில் மட்டுமே போக்குவரத்து செயல்பட்டதால் அதிவிரைவுச்சாலையில் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்திய ஊழியரின் Work permit அட்டை கண்டெடுப்பு: உரியவரிடம் கொண்டு சேர்க்க Share செய்து உதவுங்கள்

இந்த சம்பவத்தின் காட்சிகள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் டாக்சியின் முன்பகுதி லாரியின் அடிப்பகுதியில் சிக்கி சிதைந்து இருப்பதை காணமுடிகிறது.

அன்று இரவு 8:25 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதனை அடுத்து 52 வயதான டாக்ஸி ஓட்டுநர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் 74 மற்றும் 76 வயதுடைய இரண்டு பெண் டாக்ஸி பயணிகளும், 36 வயதான லாரி பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Video: SgRoadsaccidentcom/videos

சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்