வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூருக்கு வளர்ச்சி… ஊழியர்களை நம்பியுள்ள சிங்கப்பூர் மக்கள்

(Photo: TODAY)

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் திரும்பி படையெடுப்பதால், கடந்த ஜூலை மாத நிலவரப்படி HDB குடியிருப்புகளின் வாடகை அதிகரித்துள்ளது.

வாடகை அதிகரிப்பு குறித்த கருத்தை சில சொத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லாரி மோதி ஊழியர் மரணம்: போதையில் லாரி ஓட்டிய டிரைவர் கைது

கடந்த ஜூலை மாதத்தில், 1,762 HDB குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் மாதம் அடிப்படையில் அது 11.1% அதிகரித்துள்ளது.

நிறுவனங்கள் தங்களின் மனிதவள நெருக்கடியைத் கட்டுக்குள் கொண்டுவர அதிக வெளிநாட்டு ஊழியர்களை நாடுகின்றன.

“தொழிலாளர் சந்தை மீட்சி தொடரும் என்றும் அது வாடகை தேவைக்கு பங்களிக்கும் என்றும் மனிதவள அமைச்சகம் எதிர்பார்க்கிறது,” ஹட்டன்ஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களின் நிலையான வருகை, HDB குடியிருப்புகளுக்கான வாடகை விலையை உயர்த்தியுள்ளதாக ஒன் குளோபல் குரூப் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்