“லாரி பயணத்தை தடை செய்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம்” – எச்சரிக்கும் அரசாங்க அமைப்புகள்

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது - தெரிந்துகொள்ளுங்கள்
(Photo: Reuters/Edgar Su)

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி போக்குவரத்துக்கு அரசாங்கம் தடை விதித்தால் தொழிலில் பாதிப்பு ஏற்படும் என்று முதலாளிகள் கவலைகொள்வதாக பல அரசாங்க அமைப்புகள் கூறியுள்ளன.

அவ்வாறு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டால் அது பல திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.

திடீரென மயங்கி மரணித்த 33 வயது மணிமாறன்… 4 மாதங்களுக்கு முன் தான் தந்தையானார்

அதாவது புதிய வீடு கட்டும் திட்டங்கள், ரயில் பாதை அமைப்பு திட்டங்கள் போன்றவைக்கு கால தாமதம் ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது.

இதனால் செலவுகள் எகிறும் என்றும், சமூக அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்பதையும் அதிகாரிகள் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வதற்கு கடும் எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

அதற்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அரசாங்கத்திடம் ஒப்படைத்து அவ்வாறான போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

ஆனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதே போக்குவரத்து வசதி தான் தொடரும் என்ற கவலையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை: ஓட்டுனர்களுக்கு வரப்பிரசாதம்!

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்