வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்

foreign workers Mandatory rules outdoor Oct 24
(Photo: RFID)

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (அக். 24) அறிமுகப்படுத்தியது.

அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் வெளிப்புறத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களை பாதுகாப்பதையே அந்த புதிய விதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரியின் மேலே கட்டப்பட்ட மரப்பலகை.. காற்றில் பறந்து கார் சேதம் (வீடியோ)

வெளிப்புறங்களில் கடுமையான உடல் உழைப்பை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 நிமிட இடைவெளி கட்டாயமாகும்.

இந்த புதிய நடவடிக்கைகள், அதிக வெயிலுக்கு உடலை பழக்கப்படுத்துதல், தண்ணீர் குடித்தல், ஓய்வு எடுத்தல் மற்றும் நிழலில் இருப்பது ஆகிய நான்கு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய நடவடிக்கைகள்

வெளிப்புற வேலைகளை படிப்படியாக பழகிக்கொள்ள புதிய ஊழியர்களுக்கு நேரம் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து வெளிப்புற ஊழியர்களும் குறைந்தபட்சம் 1 மணிநேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்த வேண்டும் என்று MOM கூறியுள்ளது.

ஊழியர்கள் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நிழலான பகுதிகளில் ஓய்வு எடுக்க இடைவேளைகளையும் வழங்க வேண்டும்.

Wet Bulb Globe Temperature (WBGT) என்னும் முறையில் ஒவ்வொரு மணி நேரமும் வெப்பம் கண்காணிக்கப்பட வேண்டும், குறிப்பாக அதிக வெப்பமான நாட்களில்.

WGBT சோதனையில் வெப்பம் 32 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், ஊழியர்களை நிழலின் கீழ் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று MOM கூறியது.

மீறினால் தண்டனை

இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டனவா என்பதை உறுதிசெய்ய வேலையிடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என MOM கூறியுள்ளது.

இதனை பின்பற்றதாக முதலாளிகள், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அதாவது, வேலை நிறுத்த உத்தரவு மற்றும் அபராதம் ஆகியவையும் விதிக்கப்படலாம்.

“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்