வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தத் தடையா? – தொடரும் பணியிட மரணங்களால் மனிதவள அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு!

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் அல்லது அபாயங்களைத் தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை போன்றவற்றை நிறுவனங்களிடம் கண்டறியப்பட்டால்,வெளிநாட்டு ஊழியர்களைப் புதிதாக பணியமர்த்த அவற்றுக்கு தடை விஹிக்கப்படலாம்.

பணியிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளுக்கு நிறுவன முதலாளிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு பணியிட விபத்துகளினால் ஏற்படும் காயங்களும் மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில்,அவற்றைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதி பாதுகாப்பு உயர்த்தப்பட்ட ஆறுமாத காலம் தொடங்கியது.

இந்தாண்டு பணியிட மரணங்கள் 36 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டின் முழுவதும் எண்ணிக்கை 37ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானத்துறை,உற்பத்திதுறை போன்ற அதிக ஆபத்து உள்ள துறைகள்,கிரேன்,லாரிகளைப் பயன்படுத்தும் துறைகள் செப்டம்பர்15ஆம் தேதி வரை பாதுகாப்பு நடைமுறைகளை சோதனை செய்யவும் பாதுகாப்பு பணிநிறுத்த உத்தரவை அறிவிக்கவும் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. நிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆவணப்படுத்த வேண்டும்.

ஆய்வின் போது மனிதவள அமைச்சக அதிகாரிகள் பரிசோதிப்பர்.இதற்கு இணங்க மறுக்கும் நிறுவனங்கள்,ஒரு மாத காலத்திற்கு புதிதாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்படும்.இந்தாண்டு ஏற்பட்ட பணியிட மரணங்களில் கட்டுமானத்துறை முதலிடம் வகிக்கிறது.