ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

மகிழ்ச்சியான நாடு
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

ஊழியர்களின் வேலை நேரம் போக அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள் கண்டிப்பாக அவர்களுக்கு அதற்கான ஊதியத்தை கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.

அதாவது சிங்கப்பூரின் சட்டத்தின்படி, அதிகபட்சமாக மாதத்துக்கு 72 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்கலாம்.

விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க வாய்ப்பு: பட்டியலில் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு நாடுகள்

பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் ஓவர் டைம் வேலை நேரத்துக்கான ஊதியத்தை ஒப்பந்தம் செய்தபடி பெற்றுக்கொள்கின்றனர்.

அது ஒரு பக்கம் என்றால், வேலையை மட்டும் வாங்கிக்கொண்டு சம்பளம் முறையாக கொடுக்காத முதலாளிகள் இன்னொருபக்கம்.

சமீபத்தில் இதுபோன்ற ஒரு வழக்கை சந்தித்த நீதிமன்றம், நியாயத்தின் பக்கம் உறுதியாக நின்று ஊழியர்களுக்கு பக்கபலமாக தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், ஊழியர்களின் வேலை நேரம் போக அதிக நேரம் வேலை வாங்கினால் அதற்கான ஊதியத்தை முறையாக ஊழியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று தீர்ப்பில் கூறியது.

“ஊழியர்கள் மாதம் 72 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம், அதற்கான ஊதியத்தை மட்டும் கொடுத்தால் போதும். அதற்கு மேல் உள்ள வேலை நேரங்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியதில்லை” என்ற வாதத்தை அந்நிறுவனம் நீதிமன்றத்தில் முன்வைத்தது.

ஆனால், ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்தார்களோ அதற்கான முழு சம்பளத்தையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற தீர்ப்பை நீதிமன்றம் அதிரடியாக வெளியிட்டது.

சிங்கப்பூரின் அந்த சட்டம் ஊழியர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, முதலாளிகளின் நலனுக்காக இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது ஊழியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இந்திய அரிசிகளை வாங்கி குவிக்கும் இந்திய மக்கள்.. தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்