மோசடி முகவர்களால் வெளிநாட்டு ஊழியர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்….

(Photo: TODAY)

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு இங்கு அதிக உரிமைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு போன்ற சமூக சேவைகளை பெறுவதற்கான வழிகளும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மாறான இரு தொடர்புடைய மரணங்கள்… காவல்துறை தீவிர விசாரணை

ஒப்பிட்டு பார்க்கும்போது, திறன் குறைவாக உள்ள ஊழியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்தியிருக்கும் தாய்லாந்து, குவைத் போன்ற நாடுகளைவிட சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களுக்கு அவைகள் அதிகம் கிடைக்கப்பெறுகின்றன.

இதனை ‘The Majurity Trust’ மற்றும் ‘லீட்201 ஆகியவற்றின் ஆய்வு விவரங்கள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், உயர் திறன் ஊழியர்களை கொண்ட நியூசிலாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளும் பாதுகாப்பும் சிங்கப்பூரில் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் அந்த ஆய்வு விளக்குகிறது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்…

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விரிவான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முழுமையான காப்புறுதிப் பாதுகாப்பு ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு ஆலோசனை வழங்குகிறது.

குறிப்பாக சொல்லப்போனால், ஊழியர்கள் அதிகம் எதிர்கொள்ளும் முகவர் மோசடிகளில்,  அவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதும் அதன் ஆலோசனையாக உள்ளது.

Banana Leaf Apolo உணவகம் மீது விதிமீறல் குற்றச்சாட்டு