சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டியவை..!

Foreign Workers Should Know About Residence
Foreign Workers Should Know About Residence (Photo: Ngau Kai Yan)

சிங்கப்பூரில் உள்ள சில அயல்நாட்டு ஊழியர்கள் மோசமான சூழல்களில் வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுடைய முதலாளிகள் அவர்களைச் சரியாகக் கவனித்துத் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் ஒரு வசிப்பிடத்தில் வசிக்க உங்களுக்கு உரிமை உண்டு.

இதையும் படிங்க : வணிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செந்தோசாவிற்கு இலவச அனுமதி..!

சட்டப்படி நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் காலம் முழுவதும் அத்தகைய வசிப்பிடத்தில் வசிப்பதை உங்கள் முதலாளி உறுதி செய்ய வேண்டும்.

  • உங்கள் வசிப்பிடம் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்
  • இரைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்
  • நெரிசலாக இருக்கக் கூடாது

இருப்பினும், உங்கள் வசிப்பிடம் சுத்தமாக, செளகரியமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் அதைத் தவறாமல் ஒழுங்குபடுத்தவும் சுத்தம் செய்யவும் வேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வசிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தால், அதுபற்றி மனிதவள அமைச்சகத்திடம் நீங்கள் முறையிடலாம்.

அப்போது தான் அமைச்சகத்தால் உங்களுக்கு உதவிசெய்ய முடியும்.

இது பற்றி தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவலும் கண்டிப்பாக இரகசியமாக வைத்திருக்கப்படும்.

பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
  • மனிதவள அமைச்சு சேவை மையம்
  • 1500 பெண்டமிர் ரோடு
  • சிங்கப்பூர் 339946
  • தொலைபேசி : 6438 5122

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு…!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil