கொரோனா வைரஸ்: சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு..!

Singapore foreign workers
(Photo : Reuters)

சிங்கப்பூர் உட்பட 11 நாடுகளிலிருந்து இந்தியா செல்வோர், இனி 14 நாள்களுக்குத் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் சுமார் 100 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவிவரும் இந்த கொரோனா கிருமித்தொற்று, இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பள்ளி மாணவி துன்புறுத்தல் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சர்..!

இதில் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, மலேசியா, தாய்லாந்து, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய பகுதிகளில் இருந்து அல்லது அந்நாடுகளின் வழியாக இந்தியா செல்வோர், 14 நாள்களுக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவரவர் அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர்வாசிகள் இந்தியாவில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற, “seithi” இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டது.

  • பயணிகள் இந்தியாவிற்குள் நுழையும் முன், விமான நிலையத்தில் தங்கள் உடல்நிலை குறித்த விவரங்களையும், தங்களது தங்குமிட வவரங்களையும் தெரிவிக்கவேண்டும்.
  • மேலும் பொது இடங்களுக்குச் செல்லப்போவதில்லை என்ற பிரகடனப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும். மேலும் அதை மீறக்கூடாது, அதைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் “Seithi” குறிப்பிட்டுள்ளது.

Source : Seithi

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறையை மீறிய வெளிநாட்டு மாணவர் அனுமதி ரத்து..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil