சிங்கப்பூரில் விதிமுறையை மீறிய வெளிநாட்டு மாணவர் அனுமதி ரத்து..!

சர்வதேச முதுகலை மாணவர் ஒருவர், வீட்டில் தங்கும் அறிவிப்பை மீறிய காரணத்திற்காக, நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) அவரை நீக்கம் செய்துள்ளது.

தேசிய கல்வி நிலையத்தை (NIE) சேர்ந்த மாணவர் இவர், தனது பயணம் குறித்து தவறான தகவல்களை, கல்வி நிலையம் மற்றும் NIE ஒழுக்காற்று வாரியத்திற்கு பலமுறை வழங்கியதாக கல்வி அமைச்சின் (MOE) செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஆறு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி..!

இந்நிலையில், அவரது மாணவர் அனுமதி அட்டையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனா, ஈரான், வடக்கு இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து திரும்பும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் வீட்டில் தங்கும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூர் திரும்பிய பின்னர், 14 நாட்கள் எல்லா நேரங்களிலும் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

இந்த வீட்டில் தங்கும் அறிவிப்புகளுக்கு இணங்காதவர்கள் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாய விடுப்பு அல்லது வீட்டில் தங்கும் அறிவிப்புகளை அனைத்து மாணவர்களும் பின்பற்றவேண்டும் என MOE கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்; நிறுவனத்துக்கு $18,000 அபராதம்..!