சிங்கப்பூரில் மேலும் ஆறு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி..!

Singapore reports 6 new COVID-19 cases
Singapore reports 6 new COVID-19 cases; 3 linked to SAFRA Jurong cluster (File photo: Facebook/SAFRA Jurong)

Singapore COVID-19 Cases: சிங்கப்பூரில் மேலும் ஆறு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி (மார்ச் 10) செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய நோய்த்தொற்று சம்பவங்களுடன், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 166ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்; நிறுவனத்துக்கு $18,000 அபராதம்..!

குணமடைந்தோர்

தற்போதுவரை, 93 நபர்கள் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் உள்ள 73 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில், பெரும்பாலான நபர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் MOH தெரிவித்துள்ளது.

கூடுதலாக தீவிர சிகிச்சை பிரிவில் பன்னிரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள் 

புதிதாக பாதிக்கப்பட்ட மூன்று சம்பவங்கள் சாஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன் தொடர்புடையது.

தற்போது இந்த சாஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன், மொத்தம் 39 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் புதிய சம்பவங்களில் இரண்டு முந்தைய நபர்களோடு தொடர்புடையது.

மற்றொருவர் சிங்கப்பூரர், இவர் பிப்ரவரி 15 முதல் மார்ச் 7 வரை பிரான்சில் இருந்தார், தற்போது எந்த முந்தைய நோய்த்தொற்று நபருடனும் தொடர்பில்லை என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மாணவருக்கு COVID-19 தொற்று உறுதி; 10 நாட்களுக்கு பள்ளி மூடல்..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil