வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்; நிறுவனத்துக்கு $18,000 அபராதம்..!

Logistics firm fined $18,000 for making false declaration
Logistics firm fined $18,000 for making false declaration on work pass application (Photo : Straits Times)

FCF கட்டமைப்பின்கீழ், வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்களைச் சமர்பித்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு, $18,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Ti2 லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர் பிரான்சிஸ் சியாங் டின் யூய் என்பவர், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மாணவருக்கு COVID-19 தொற்று உறுதி; 10 நாட்களுக்கு பள்ளி மூடல்..!

வேலைக்கு ஆளமர்த்தும் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பின்கீழ் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முதல் நிறுவனம் இது.

சிங்கப்பூர்த் திறனாளர்களைப் பரிசீலிக்காமல், அதற்கு முன்னே வெளிநாட்டவரை வேலைக்குத் தேர்வு செய்த குற்றத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, வெளிநாட்டு ஊழியர்களை 24 மாதங்களுக்கு, அதாவது 2 வருடங்கள் பணியமர்த்துவதற்கு MOM தடை விதித்துள்ளது.

மேலும் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரின் வேலை அனுமதியை உடனடியாக ரத்து செய்தது.

தண்டனை

முதலாளிகள் தங்கள் வேலை அனுமதி விண்ணப்பங்களில் துல்லியமான, முழுமையான மற்றும் உண்மையுள்ள தகவல்களை வழங்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு…

  • $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்
  • இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
  • இரண்டும் விதிக்கப்படலாம்

Source : Straits Times

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பயனியர் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து; 31 அவசர வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன..!