சிங்கப்பூரில் மாணவருக்கு COVID-19 தொற்று உறுதி; 10 நாட்களுக்கு பள்ளி மூடல்..!

Singapore School Closed for 10 days after student tests positive for COVID-19
The Orange Tree pre-school branch closed for 10 days after student tests positive for COVID-19 (Photo: Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 சோதனையில் மாணவர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, சுவா சு காங் கிளை, ஆரஞ்சு ட்ரீ ப்ரீ-ஸ்கூல் (Orange Tree pre-school) 10 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

10 சுவா சு காங் சாலையில் அமைந்துள்ள ஆரஞ்சு ட்ரீ ப்ரீ-ஸ்கூல் (CCK) மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: மேலும் 10 புதிய சம்பவங்களை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

COVID -19ல் 160வது சம்பவமாக திங்களன்று உறுதி செய்யப்பட்ட மாணவர், சம்பவம் 145-இன் குடும்ப உறுப்பினர் ஆவார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதன் பின்னர், சாஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன் இவர் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மூடல் காலத்தில் விடுப்பு வழங்கப்படும்.

அச்சமயத்தில் ஆரஞ்சு ட்ரீ (CCK), பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் என்றும் ECDA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பயனியர் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து; 31 அவசர வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன..!