சிங்கப்பூரில் இன்று (மார்ச் 29) முதல் வெளி இடங்களில் “மாஸ்க் கட்டாயமில்லை” – கட்டுமான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 29) முதல், வெளி இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாக இருக்கும், அதாவது கட்டாயம் இல்லை.

வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமானது என்றாலும், உள் இடங்களுக்குள் (Indoors) முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பிரதமர் திரு லீ தனது உரையில் கூறினார்.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

உள் இடங்கள்:

பேருந்து மற்றும் ரயில்கள், உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், கடைத்தொகுதிகள், ஈரச்சந்தைகள் உள்ளிட்டவை உட்புற இடங்களில் அடங்கும்.

இந்த இடங்களில் முகவவசம் அணிவது கட்டாயம், ஆகையால் மறந்துவிடாமல் அதை பின்பற்றுங்கள்.

வெளி இடங்கள்:

பூங்காக்கள், திடல்கள், இயற்கை வனப் பாதைகள், திறந்தவெளி நடைபாதைகள், மேம்பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவை வெளிப்புற இடங்களில் அடங்கும்.

மேற்குறிப்பிட்ட இடங்களில் முகக்கவசம் தேவை இல்லை என்றாலும், உங்கள் பாதுகாப்பிற்காக வேண்டி நீங்கள் அணிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள்

வெளிப்புற முகக்கவசம் கட்டாயமில்லை என்பதால் இன்று முதல் சில துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவர்.

குறிப்பாக சொல்லப்போனால், கட்டுமான ஊழியர்கள் அதிக நேரம் வெயிலில் வேலை பார்க்கின்றனர், அவர்களுக்கு முகக்கவசம் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.

இருப்பினும், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு ஊழியர்கள் தேவை இருப்பின் தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா… “வாரம் 5 விமான சேவை” – குறைந்த கட்டணம் சிறந்த சேவை!