“வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதில் சிங்கப்பூரர்களை எடுக்கலாமே” – சிங்கப்பூரர்கள் வாதம்: துணைப் பிரதமர் விளக்கம்

(Photo: MOM)

சிங்கப்பூர் ஊழியர்களை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசாங்கம் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்தார்.

சிங்கப்பூர் பொருளாதாரக் கொள்கை மன்றத்தில் இன்று (அக் 18) பேசிய திரு வோங், இந்த கடும் நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலில், பொருளியல் வளர்ச்சியை எட்டுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் சிங்கப்பூர் கையாளும் உத்திகளை பற்றிப் பேசினார்.

சமீப ஆண்டுகளில், வெளிநாட்டினருக்கு எதிரான சில மோசமான எதிர் உணர்வு வெளிப்பட்டு வருவதை திரு வோங் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை… எங்களுக்கு இந்த முறை வேண்டும் ஊழியர்கள் ஆர்வம் – பின்வாங்கும் நிறுவனங்கள்

சிங்கப்பூர் அதன் கொள்கையில் எப்போவுமே திறந்த நிலையில் இருக்க விரும்புகிறது, ஆனால் சிங்கப்பூரர்களுக்கு வேலைகள் திரும்பப் வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இங்கு அதிகமான வெளிநாட்டினரை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிலர் வாதிடுவதாகவும் அவர் சொன்னார்.

ஆனால் அது மோசமான ஒரு எண்ணம் என்று அவர் கூறினார், ஏனெனில் அவ்வாறு செய்வதால் அந்த வேலைகள் தானாகவே சிங்கப்பூரர்களுக்கு கிடைத்துவிடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு மாறாக வேலை தொடர்பான கொள்கைகள் கட்டுப்படுத்தப்பட்டால், சிங்கப்பூரில் அமைந்துள்ள உலகளாவிய நிறுவனங்கள், பெரிய அளவிலான நிபுணத்துவம் கொண்ட வேறு நாடுகளுக்கு சென்று விடும் என்பதையும் அவர் விளக்கி கூறினார்.

அப்படி ஒரு நிலை வந்தால் அனைத்து வேலைகளையும் நாம் இழப்போம், மேலும் சிங்கப்பூரர்கள் பணிபுரியும் பல நல்ல வேலைகளும் இழக்க நேரிடும் என்பதை அழகாக விளக்கி கூறினார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்.

இவ்வாறான கொள்கைகளை சிங்கப்பூர் அமைந்தால், நாம் பல தசாப்தங்களாக உழைத்த உழைப்பு வீணாகிவிடும் என்றும் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா – கட்டண விவரம்