வெளிநாட்டு ஊழியர்கள் என்ன அந்தக்கால அடிமைகளா? “சக மனிதர்களை இப்படியா நடத்துவது”… வெகுண்டெழுந்த பெண்

"வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது" - மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம் Ng renews call to ban ferrying workers on lorries சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு - இனியும் அதே தான்
Stomp

சக மனிதர்களை இப்படியா நடத்துவது.. இது தான் மனிதாபிமானமா? அவர்களும் மனிதர்கள் தான்., என்ற கண்டன குரல் நெட்டிசன்களிடம் இருந்து எழுந்துள்ளது.

அப்படி என்ன நடந்தது?… சிங்கப்பூரில் கடந்த வியாழன் காலை (செப்டம்பர் 22) கனமழை பெய்து கொண்டிருந்த போது வெளிநாட்டு ஊழியர்கள் ஆட்டுமந்தைகளை போல லாரியில் ஒரு பக்கமாக ஒடுங்கி செல்லும் அவலநிலையை கண்ட பெண் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஸ்டாம்பர் இசபெல் என்ற அந்த பெண் இதுகுறித்து கூறியதாவது; ஆரஞ்சு நிற உடையணிந்த ஊழியர்கள், கடும் மழையின் போது லாரியின் பின்புறத்தில் மழையில் நனைய கூடாது என்பதற்காக பதுங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

லாரியின் மேற்புறம் மூடப்பட்டிருந்தாலும், மழைநீர் உள்ளே செல்லாமல் தடுக்கும் அளவுக்கு முழுமையான கவர் கொண்டு அது மூடவில்லை.

லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய இளைஞர்: போலீசை கண்டதும் தப்பியோட்டம் – மடக்கி பிடித்த போலீஸ்

“தயவுசெய்து.., மனிதவள அமைச்சகம் (MOM), நிலப் போக்குவரத்து ஆணையம், புலம்பெயர்ந்த ஊழியர்கள் நிலையம் மற்றும் அரசாங்க அமைப்புகளின் இதனை கவனத்தில் கொள்ளுங்கள்.., வெளிநாட்டு ஊழியர்களை மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து மூலம் கொண்டு செல்லும் விதிகளை விரைவுபடுத்துங்கள்” என்று அவர் கூறினார்.

இந்த வகையான அணுகுமுறை ‘அக்காலத்து அடிமைத்தனம்’ என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கடும் மழை மற்றும் ஈரமான தரையின் காரணமாக ஊழியர்கள் உட்கார முடியாமல் தடுமாறி நிற்பதையும் அந்த படத்தில் காணலாம்.

தொழிலாளர்களை பாதுகாக்க லாரியின் பின்புற அமைப்புகளில் மழை உறைகளை கட்டாயமாக்கி அரசாங்கம் உத்தரவிட்டதை நாம் அறிந்துள்ளோம். ஆனாலும், இன்னமும் ஊழியர்கள் அடிமைகளை போன்று செல்லும் நிலையில் தான் உள்ளனர் என்று அப்பெண் வருத்தம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அதிரடி சோதனை: 71 பேரை கைது செய்தது போலீஸ்