லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய இளைஞர்: போலீசை கண்டதும் தப்பியோட்டம் – மடக்கி பிடித்த போலீஸ்

youth-evade-road-block-no-license
Singapore Police Force/Facebook

வேகத்தை குறைத்து வாகனத்தை சாலையோரம் நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய போதிலும், 19 வயது இளைஞன் ஒருவர் அவ்வாறு செய்யாமல் காரை பின்னோக்கிச் வேகமாக ஓட்டி தப்பித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

செம்பவாங் சாலையில் நேற்று முன்தினம் (செப். 22) உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சாலைத் தடுப்பை அமைத்தனர்.

சிங்கப்பூரில் அதிரடி சோதனை: 71 பேரை கைது செய்தது போலீஸ்

அப்போது அவ்வழியாக அன்று அதிகாலை 3:30 மணியளவில் வந்த இளைஞரை அதிகாரிகள் வாகனத்தைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு கூறினர்.

ஆனால், அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமால் பின்னோக்கி வேகமாக சென்றார். இந்நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் சிசிடிவி உதவியுடன், ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், அவர் நக்கிள் டஸ்டர் ஆயுதம் ஒன்றை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக பாசிட்டிவ் முடிவு வந்தது.

இந்நிலையில், அவர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் வரை இந்த நாட்டுக்கு ஜாலியா போகலாம்..!