COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு; மீறினால் வேலை அனுமதி ரத்து – MOM..!

சிங்கப்பூரில் வகுக்கப்பட்டுள்ள கூட்டம் கூடுவதற்கான அளவு விதிகளை மீறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படும் என்று மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் COVID-19 பரவலை சமாளிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 10 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா முடக்கம்: சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிப்போர் கவனத்திற்கு – இந்திய தூதரகம் (HCI)..!

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கூட்டம் வெளிப்பகுதியில் அதிகமாக இருந்தால், கூடுதல் முன்னெச்சரிக்கையாக அவர்களை கலைக்க MOM நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைக்காத ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படும் என்று MOM எச்சரித்துள்ளது.

அதே போல், உட்புற பகுதிகளில் சந்திக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் கூட்டம் கூடுவதற்கான அளவு குறித்த சமீபத்திய விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும், அல்லது லிட்டில் இந்தியா போன்ற நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.”

மேலும், தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறுபவர்கள், அவர்கள் வெளியில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து, தங்கள் வேலையை முடித்தவுடன் வீடு திரும்ப வேண்டும் என்று MOM கூறியுள்ளது.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்குத் இந்த ஆலோசனைகளை தெரிவிக்குமாறு MOM கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டம் கூடுவதற்கான அளவு குறித்த இந்த புதிய கட்டுப்பாடு வியாழக்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லியாட் டவர்ஸில் (Liat Towers) தீ விபத்து..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #WorkPass #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil