செல்லுபடியாகும் விசா இல்லாமல் வந்த வெளிநாட்டவர் – அதிகாரிகளிடம் தந்திரத்தை காட்ட முயன்று சிக்கியருக்கு சிறை

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

செல்லுபடியாகும் விசா இல்லாமல் போர்டிங் கேட் ஒன்றிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்க முயன்று பிடிபட்டார்.

அந்த பெண்ணும் அவரது தோழரும் வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்திற்காக சாங்கி விமான நிலையத்தில் உள்ள போர்டிங் கேட் ஒன்றிற்குள் நுழைய முயன்றனர்.

மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் மலம் கழித்த நபர் – யார் அவர்?

ஆனால் அவர்கள் இருவரிடமும் செல்லுபடியாகும் விசா ஏதும் இல்லாததால் அவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை அடுத்து, அந்த பெண் இரண்டு அதிகாரிகளுக்கும் தலா 50 அமெரிக்க டாலர் (S$70) லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், இரு அதிகாரிகளும் அதனை நிராகரித்தனர்.

52 வயதான சீன நாட்டவரான Zeng Xiuying என்ற அந்த பெண், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கையூட்டு வழங்க முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணுக்கு நேற்று (நவ.1) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனையின் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி, அவர்கள் இருவரும் தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனையம் 1 க்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் சாங்கி முனையம் 2 முழுவதும் திறப்பு – 4 மாடி டிஜிட்டல் நீர்வீழ்ச்சி, புதிய தோட்டம் உள்ளிட்டவை வேற லெவல்