வெளிநாட்டினர் இனி கட்டாய அனுமதி வாங்க வேண்டும் – சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு

Foreigners need approval to buy mixed commercial and residential properties, land in Singapore
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் நிலத்தை வாங்க விரும்பும் வெளிநாட்டினர் இன்று ஜூலை 20 முதல் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும்.

அதாவது கலப்பு வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கான சொத்து அல்லது நிலத்தை வாங்க விரும்பும் வெளிநாட்டினர் சிங்கப்பூர் அரசாங்க அனுமதியை பெறுவது இனி அவசியம்.

வித்தியாசமான முறையில் Singapore 4D டிராவில் பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்கள் – Singapore Pools வெளியிட்ட அறிவிப்பு

சட்ட அமைச்சகம் (MinLaw) மற்றும் சிங்கப்பூர் நில ஆணையம் (SLA) குடியிருப்பு சொத்து சட்டத்தை (RPA) மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

குடியிருப்புகளைக் கொண்ட கடைவீடுகள் மற்றும் சில ஷாப்பிங் நிலையங்களை உள்ளடக்கிய கலப்பு வணிக மற்றும் குடியிருப்பு வீடுகள், இதற்கு முன்பு குடியிருப்பு அல்லாத சொத்தாக பட்டியலிடப்பட்டன.

ஆனால், இனி அவை குடியிருப்பு சொத்துக்கள் என்ற பட்டியலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகையால் அவை குடியிருப்பு சொத்துக்கள் சட்டத்தின்கீழ் இனி வரும். எனவே அரசாங்க அனுமதியை பெறுவது இனி அவசியம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகளுக்கு (PR) சிறப்பு சலுகை – மற்றவர்களுக்கு S$2 கட்டணம்