அதிக அளவில் வெளிநாட்டு பணம்… சிங்கப்பூருக்குள் நுழைந்த இரு வெளிநாட்டவர்கள் – ஸ்கேனில் செக் வைத்த போலீஸ்

indonesian-women-undeclared-cash
ICA/Facebook Page

சிங்கப்பூருக்குள் அதிக அளவில் பண நோட்டுகளை கொண்டு வந்த வெளிநாட்டு பெண்கள் பிடிபட்டார்.

அவர்கள் கடந்த மே 10 அன்று Singapore Cruise Centre இல் உள்ள குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

படகு மூலம் சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த இரண்டு இந்தோனேசியப் பெண்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பெண்கள் கொண்டு வந்த உடமைகளை எக்ஸ்ரே ஸ்கிரீனிங் செய்ததில், அவர்கள் முன் அறிவிப்பு செய்யாமல் அதிக அளவு பண நோட்டுகளை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ… Fan boy வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிஷ்டம்

பின்னர் பெண்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் பேக் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த மூன்று அடுக்கு பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

முன் அறிவிப்பு செய்யாமல் கொண்டு வந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு சுமார் S$35,600க்கும் அதிகமாக இருந்தது என்று ICA தெரிவித்துள்ளது.

பின்னர் இந்த வழக்கு கூடுதல் விசாரணைக்காக SPF போலீசாரிடம் மாற்றப்பட்டுள்ளது.

சட்டம்

S$20,000க்கு அதிகமான பணத்தை எடுத்துக்கொண்டு சிங்கப்பூருக்குள் வந்தாலோ அல்லது வெளியேறினாலோ அது குறித்து முழுமையான மற்றும் துல்லியமான அறிக்கையை போலீசாரிடம் பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.