வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்
Photo: Mothership

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கியதற்காக 48 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் நர்ராஹி பின் நோமன் என்ற அவரை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் (ICA) அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கூட்ட நேரிசல்? – புதிய ஊழியர்களை எங்கே தங்க வைப்பது… அவகாசம் கேட்கும் MOM

கடந்த ஜனவரி 31 அன்று பூன் லே டிரைவில் அவர் வசிக்கும் இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

28 வயதுமிக்க இந்தோனேசிய ஊழியரை தவறு செய்யத் தூண்டியதற்காக கடந்த செப். 14 அன்று நர்ராஹிக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

போலியான சிங்கப்பூர் ஐசி வைத்திருந்ததற்காக இரண்டு இந்தோனேசியர்களுக்கு தலா இரண்டு மாத சிறைத்தண்டனை கடந்த ஜனவரியில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவருக்கும் நர்ராஹி உதவியது விசாரணையில் தெரியவந்தது.

என்ன நடந்தது?

இந்தோனேசியரான ஓன்கி ஃபெப்ரியன் (28) கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று சிங்கப்பூர் வந்துள்ளார். பிறகு அவர் நர்ராஹியின் வீட்டில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

வேலை வாய்ப்பு கட்டணமாக ஊழியரிடம் இருந்து S$550 வசூல் செய்த நர்ராஹி, வேறொருவரின் விவரங்கள் அடங்கிய தவறான சிங்கப்பூர் ஐசியை ஊழியரிடம் கொடுத்துள்ளார்.

நர்ராஹியின் அறிவுறுத்தலின் கீழ், ஓங்கி சிங்கப்பூரில் 14 நாட்கள் பணியாற்றிய பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று இந்தோனேஷியா திரும்பினார்.

அதே மாதத்தில், 23 வயதான இந்தோனேசியாவைச் சேர்ந்த அஸ்ருல் முசாஹருடன் ஓன்கிக்கு பழக்கம் ஏற்பட்டது, அஸ்ருல் சிங்கப்பூரில் வேலை தேடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 8 அன்று, ஓன்கியும் அஸ்ருலும் மீண்டும் சிங்கப்பூர் வந்து நர்ராஹியின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு சென்றவுடன் இருவரும் நர்ராஹியிடம் தலா S$200 கொடுத்து வேறொருவரின் விவரங்கள் கொண்ட சிங்கப்பூர் ஐசிகளை பெற்றுள்ளனர்.

இந்த அடையாள அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்கு மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும், நீங்கள் இந்தோனேசியர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் நர்ராஹி அவர்களுக்கு நினைவூட்டினார்.

அடுத்த நாள், ஓன்கியும் அஸ்ருலும் ஒரு மாலில் கிளீனர்களாக வேலை செய்யத் தொடங்கினர்.

இறுதியாக போலீசார் கடந்த ஜனவரி 12 அன்று மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது அவர்கள் இருவரும் பிடிபட்டனர். அதன் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் வேலைகள் குறைவு