Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

வெளிநாட்டு ஊழியருக்கு Work permit வேலை அனுமதி பெற மோசடி செய்ததாக வேலைவாய்ப்பு முகவருக்கு நேற்று (ஆகஸ்ட் 25) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

44 வயதான சிங்கப்பூரர் லீ பெக் லீ என்ற அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து வேலைவாய்ப்பு நிறுவனத் தொழிலிலும் ஈடுபட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முதியவர் ATM கார்டை பயன்படுத்தி S$162,000 பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

லீ , C1EA என்னும் நிறுவனத்தின் இயக்குநராகவும், வேலைவாய்ப்பு முகவராகவும் முக்கிய பதவியில் இருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Work permit அனுமதியில் பொய்யான தகவல்களை வழங்கியது தொடர்பாக மற்றுமொரு குற்றச்சாட்டும் தண்டனையின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

2021ஆம் ஆண்டு, லீ குய்யு என்ற சீன நாட்டவருக்கு வேலை வாங்கி தர வெளிநாட்டு முகவர் ஒருவர் லீயை தொடர்பு கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் சொல்கின்றன.

கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் லீ அவருக்கு Work permit வாங்கி தர மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

வேலை அனுமதிகளை பெற போலியான தகவல்களை வழங்குவது கடுமையான குற்றம் என்று MOM கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பாலத்தின் கீழ் தவறான செயலை செய்த வெளிநாட்டவர்.. S$2,500 அபாரதம் விதிப்பு