சிங்கப்பூரில் இலவச ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிகள் – நவ.21 முதல் வழங்கப்படும்

toddler-baby-boy-dies-covid-19-first-death-singapore 2023
Photo: Yahoo India

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் – ART கருவிகள் வழங்கப்பட உள்ளன.

அதாவது வரும் நவம்பர் 21 முதல் குடும்பத்துக்கு 12 ART கருவிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த பெண்களின் தவறான புகைப்படத்தை வைத்து மிரட்டல் விடுத்த ஆடவருக்கு சிறை

உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை சுயமாக பரிசோதிக்க ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுகிறது.

தொற்றுக் ஏற்பட்டதில் இருந்து நான்காவது முறையாக ART கருவிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை உச்ச காலம் என்பதையும், அதிக அளவில் ART கருவிகள் வழங்கப்பட உள்ளதையும் MOH கூறியுள்ளது.

ஆகவே, சில குடும்பங்களுக்கு ART கருவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

எதிர்கால தொற்றுநோய்கள் பற்றி இனி அச்சம் வேண்டாம் – சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்