சென்டோசா தீவு உறுப்பினர்களுக்கு இலவச கேபிள் கார் பயணம் – நீங்களும் உறுப்பினர் ஆகலாம் !

Sentosa cable car

சென்டோசா தீவு உறுப்பினர்கள் சென்டோசா லைனில் இலவச கேபிள் கார் பயணத்தை அக்டோபர் 31, 2022 வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதனால் சென்டோசா காடுகளின் பசுமை மற்றும் சுற்றியுள்ள கடற்கரையின் காட்சிகளை அனுபவிக்க முடியும்.

உறுப்பினராக பதிவு செய்வது இலவசம், ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். அதற்கு சிங்பாஸ் மூலம் நீங்கள் சிங்கப்பூர் குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பாளர் என்பதை உறுதி செய்ய  வேண்டும். இலவச சவாரியைப் பெற, சிங்கப்பூர் கேபிள் கார் டிக்கெட் கவுன்டர்களில் உறுப்பினர் கணக்கு மற்றும் QR குறியீட்டை சமர்ப்பிக்க வேண்டும். ரிடீம் செய்தால் ஒரே நாளில் பயன்படுத்துமாறு மட்டுமே டிக்கெட் கிடைக்கும்.

மேலும் உறுப்பினர்கள் S$15க்கு டாப்-அப் செய்து சென்டோசா லைன் மற்றும் மவுண்ட் பேபர் லைன் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய சிங்கப்பூர் கேபிள் ஸ்கை பாஸின் இலவச டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.