முன்களப்பணியாளர்களைப் போற்றும் விதமாக சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை!

Photo: Singapore Post Official Facebook Page

 

சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வெளியே செல்லும் போது அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைப் பின்பற்றுவதை உறுதிச் செய்வதற்காக பொது இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

‘DBS’ வங்கியின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 37% அதிகரிப்பு!

கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கொரோனா மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இவர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து முன்களப்பணியாளர்களுக்கும் (Front Line Workers) முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி சிங்கப்பூரின் 56 ஆவது தேசிய தினத்தை (Singapore National Day) முன்னிட்டு, முன்களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாகவும், அவர்களை போற்றும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் சிங்கப்பூர் அஞ்சல் துறை (Singapore Post) சார்பில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட உள்ளன.

மொத்தம் 10 சிறப்பு அஞ்சல் தலைகள் (Stamps) வெளியிடவுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், கொரோனா மருத்துவ பரிசோதனை செய்பவர்கள், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், அஞ்சல்காரர்கள், உணவு விநியோகிப்பாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் உணவங்காடி, பேரங்காடி ஊழியர்கள் உள்ளிட்டோர் அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியரின் புன்னகைக்கு காரணமான புகைப்படம் – (காணொளி)

குடிநுழைவுச் சோதனை, கட்டுமானத் துறை, சுற்றுலாத் துறை ஊழியர்கள் என மற்ற சில முன்களப்பணியாளர்களும் அஞ்சல் தலைத் தொகுப்பின் அட்டைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு அஞ்சல் தலைகள் இன்று (06/08/2021) முதல் சிங்கப்பூர் அஞ்சல் துறையின் (Singapore Post Office’s) அலுவலகங்களிலும், அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலைகளின் விலை 30 காசுகள் முதல் 1.40 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும்.

இது குறித்து சிங்கப்பூர் அஞ்சல் துறை கூறுகையில், “சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுகிறார்கள். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராட தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும் கடினமான காலங்களில் பொறுப்பு மற்றும் விடாமுயற்சியுடன் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த அன்றாட ஹீரோக்கள் கண்ணியத்துடன் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். இவர்கள் சக சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கையையும், பலத்தையும் தருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.