அசாமில் இருந்து சிங்கப்பூருக்கு பழங்கள் ஏற்றுமதி!

அசாமில் இருந்து சிங்கப்பூருக்கு பழங்கள் ஏற்றுமதி!
Photo: Singapore in India

 

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தலைநகர் கவுகாத்தியில் உள்ள விவசாயிகள் முதன்முறையாக, தாங்கள் விளைவித்த பலா உள்ளிட்ட பழங்களை கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளனர்.

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை

இது குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதன்முறையாக, அசாமில் இருந்து விவசாயிகள் நேரடியாக கவுகாத்தியில் இருந்து சிங்கப்பூருக்கு விளைபொருட்களை அனுப்பியுள்ளனர்.இவை வெறும் 4.5 மணி நேரத்தில் சிங்கப்பூரைச் சென்றடைந்தது. இது வடகிழக்கின் விவசாய ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உதவும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

“உறவில் திருப்தி இல்லை, பணத்தை திருப்பி கொடு” என பெண்ணை தாக்கிய ஊழியருக்கு சிறை

அதேபோல், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அசாமில் இருந்து சிங்கப்பூருக்கு பழங்களின் முதல் ஏற்றுமதியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது வடகிழக்கில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி வேளாண் ஏற்றுமதி மூலத்தை நிறுவும். அசாம் மாநில முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.