சிங்கப்பூருக்கு பயணம் இனி இலகுவாகும்…தனிமை, பரிசோதனை இல்லை – தொற்றுக்கு முன் இருந்த வசந்த காலம்!

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

ஏப்ரல் 1 முதல், முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

சிங்கப்பூர் வந்தவுடன் மேற்கொள்ளப்படும் On-arrival tests சோதனைகள் முற்றிலும் அகற்றப்படும்.

அதாவது, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சாங்கி ஜூவல் உட்பட விமான நிலையத்திலும் ஷாப்பிங் செய்து அமர்ந்து உணவருந்தலாம்.

“டெர்மினல் 2 படிப்படியாக திறக்கப்படும்”: எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் விமான நிலைய ஆட்சேர்ப்பு அதிகரிக்கும்!

பயணக் கட்டுப்பாடுகளை ஏன் தற்போது அதிக அளவில் எளிதாக்கப்படும்? என்பதை பிரதமர் லீ சியென் லூங் விளக்கினார்.

முன்னதாக ஓமிக்ரான் தாக்கத்தின் நிச்சயமற்ற நிலை காரணமாக சிங்கப்பூர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை இருந்ததாக அவர் கூறினார்.

“இப்போது ஓமிக்ரான் நிலைமை நன்றாகக் கட்டுக்குள் உள்ளது. ஏறக்குறைய அனைத்து பாதிப்புகளும் சமூக அளவில் ஏற்பட்டவை, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே உள்ளனர்” என்று விளக்கம் கூறினார்.

சிங்கப்பூரில் “தமிழக ஊழியர்” கடும் வெயில், மழை பாராது உழைத்து வாங்கிய எலக்ட்ரிக் பைக்… திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்

CNA குறிப்பிட்டுள்ள தகவலின் படி, தற்போது டெர்மினல் 1 மற்றும் 3 transit பகுதிகளில் 65 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு டெர்மினல்களின் வருகை அரங்குகளில் உள்ள Lotte Duty Free கடைகள் வரும் மே மாதத்துக்குள் மீண்டும் திறக்கப்படும்.

தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் “ஊழியர்கள் வேலையிட இறப்புகள்” – கண்காணிப்பு, பயிற்சியை மேம்படுத்தும் MOM