மரப்பலகைப் பெட்டிக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்… பறிமுதல் செய்த ‘ICA’ அதிகாரிகள்!

Photo: ICA Official Facebook Page

சிங்கப்பூரில் சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர்- மலேசியா எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர் சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் (Immigration & Checkpoints Authority- ‘ICA’). சோதனைச் சாவடிகளில் மட்டுமில்லாமல், சிங்கப்பூரில் உள்ள முக்கியச் சாலைகளிலும் அதிகாரிகள் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் மேலும் 3,474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இந்த நிலையில், நவம்பர் 12- ஆம் தேதி அன்று துவாஸ் சோதனைச் சாவடியில் (Tuas Checkpoints) குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சோதனைச் சாவடியில் நுழைந்த மலேசிய பதிவெண் கொண்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். லாரிக்குள் மரச்சாமான்கள் உள்ளிட்டவை இருந்தனர்.

மரப்பலகைப் பெட்டியைத் திறந்து சோதனை செய்ததில் சுங்கக் கட்டண வரி செலுத்தப்படாமல் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் கூடிய 1048 பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், சம்மந்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூர், இந்தியா இடையே விமான சேவை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சருடன் சந்திப்பு!

இதுதொடர்பான சிங்கப்பூர் சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.