ஜி20 மாநாட்டிற்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Photo: Prime Minister Of India Official Twitter Page

இந்தோனேசியா நாட்டின் பிரபல சுற்றுலா தளமான பாலி தீவில் ஜி20 மாநாடு நவம்பர் 15, நவம்பர் 16 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (Indonesia President Joko Widodo) விடுத்த அழைப்பையேற்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் பாலி சென்றடைந்தார்.

முகநூலில் எச்சரிக்கை ! – இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்; கனமழையால் ஏற்படும் திடீர்வெள்ளம்!

சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பாலி சென்றுள்ளனர்.

Photo: Prime Minister Of India Official Twitter Page

இதைத் தொடர்ந்து, நேற்று (16/11/2022) பிற்பகல் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஊழியர்களுக்கு நீண்ட கால நிதித் திட்டம்… காயம் ஏற்பட்டால் ஆதரவு தேவை

இந்த சந்திப்பின் போது, பசுமை பொருளியல் (Green Economy) மற்றும் சூரிய ஆற்றல் (Solar Energy) போன்ற வளர்ந்து வரும் புதிய துறைகளில் இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.

இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக தகவல் கூறுகின்றனர்.