ஊழியர்களுக்கு நீண்ட கால நிதித் திட்டம்… காயம் ஏற்பட்டால் ஆதரவு தேவை

சிங்கப்பூரில் வேலை செய்ய "பெஸ்ட் நிறுவனம்" எது ? - நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்
(Photo Credit : Ministry of Manpower/FB)

உணவு விநியோக வேலை செய்யும் ஊழியர்களுக்கு நீண்ட கால நிதித் திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் காயம் ஏற்பட்டால் ஆதரவு உதவி போன்ற பாதுகாப்பு சிறந்த முறையில் தேவை என கூறப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இதனை பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளன.

ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம்… பயணிகள் செய்த வேலையால் அவதி

கூட்டு செய்தி வெளியீட்டில்; NTUC, தேசிய டாக்சி சங்கம் (NTA), தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் (NPHVA) மற்றும் தேசிய டெலிவரி சாம்பியன்ஸ் சங்கம் (NDCA) ஆகியவை அத்தகைய ஊழியர்களுக்கு சிறந்த பிரதிநிதித்துவம் பற்றி பேசின.

ஊழியர்கள் நீண்ட கால தேவைகளை திட்டமிடுவது இலகுவானது அல்ல, ஏனெனில் அவர்கள் பொதுவாக சுமாரான வருமானம் கொண்டவர்கள்.

மேலும், அவர்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கூட அவர்களால் நிர்ணயிக்க முடியாது, அதை அவர்களின் நிறுவனங்கள் தான் செய்கின்றன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை காணவில்லை – தேடிவரும் போலீஸ்