ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)

ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)
Photo: Singapore Prime Minister

18-வது ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ‘பிரகதி மைதானத்தில்’ அமைந்துள்ள ‘பாரத் மண்டபத்தில்’ செப்டம்பர் 09, 10 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)
Photo: Singapore Prime Minister

இந்த மாநாட்டில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தோனேசியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், ஜெர்மனி, பிரேசில், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)
Photo: Singapore Prime Minister

குறிப்பாக, ஜி20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மாநாட்டிற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)
Photo: Singapore PM

அதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வெளியுறவுக் கொள்கைகள், வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத், உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ஆகியோரையும் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

Photo: Singapore PM

மாநாட்டு அரங்கத்தில் பிரேசில் அதிபர் உள்ளிட்ட தலைவர்களையும் நேரில் சந்தித்து சிங்கப்பூர் பிரதமர் பேசினார்.