மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”

MOM investigating case where maid was seen cleaning roof
Photo: COMPLAINT SINGAPORE/FACEBOOK

புக்கிட் திமாவில் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் வேலைசெய்யும் வீட்டின் மேற்கூரையை துடைப்பம் போட்டு சுத்தம் செய்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்த புகைப்படங்களை ஜெரால்டின் என்று அழைக்கப்படும் மற்றொரு பணிப்பெண் அதாவது அவரின் தோழி கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

இந்திய ஊழியர்களே இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல விசா தேவையில்லை – புதிய விதிமுறை

அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கம்ப்ளெய்ன்ட் சிங்கப்பூர் என்ற முகநூல் பக்கத்தில் தோழி வெளியிட்டதை அது இது வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து விசாரித்து வருவதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலைபார்க்கும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு பாதுகாப்பான வேலை நிலைமைகளை ஏற்பாடு செய்ய தவறிய முதலாளிகளை கடுமையாக பார்ப்பதாக MOM கூறியது.

லிட்டில் இந்தியாவில் சாதத்துக்கு கொடுக்கும் வெறும் குழம்புக்கு கட்டணம் வசூலிக்கும் இந்திய உணவகம் – அப்செட்-ஆன குடும்பம்