ஜி20 மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

ஜி20 மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!
Photo: Singapore PM Lee Hsien Loong

 

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 22- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு ஜி20 மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர்.

முதலாளியின் வைர நெக்லஸை திருடி போட்டுகொண்டு டிக்டாக் வீடியோ வெளியிட்ட பணிப்பெண்

இந்த ஜி20 மெய்நிகர் உச்சிமாநாட்டில், சர்வதேச சூழல், இஸ்ரேல்- ஹமாஸ் போர், பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் பேசினர்.

உச்சிமாநாட்டில் பேசியது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி நாம் எவ்வாறு கூட்டாக வேகமாக முன்னேற முடியும் என்பதை பகிர்ந்து கொண்டேன். எப்போதும் போல் அனைவருக்கும் சிறந்த உலகை உருவாக்க சக தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை தீபத்திருவிழா: ‘புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும்’ என அறிவிப்பு!

அத்துடன், டிஜிட்டல் வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்தும் சிங்கப்பூர் பிரதமர் விரிவாகப் பேசினார். அதேபோல், இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை நிறுத்தி, அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுக் காணவும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.