முதலாளியின் வைர நெக்லஸை திருடி போட்டுகொண்டு டிக்டாக் வீடியோ வெளியிட்ட பணிப்பெண்

Maid flexes diamond necklace she stole from employer on TikTok
PHOTO: TikTok

முதலாளி வீட்டில் பல முறை திருடி பிடிபட்ட பணிப்பெண் திருந்தாமல் மீண்டும் திருடியதால் தற்போது சிறைத் தண்டனை அனுபவிக்கிறார்.

பலமுறை மன்னித்த முதலாளியிடம் தொடர்ந்து அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களைப் திருடுவதை பணிப்பெண் தொடர்ந்தார்.

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

மேலும் திருடிய வைர நெக்லஸை வைத்து டிக்டாக் காணொளி ஒன்றையும் பணிப்பெண் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து, 35 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்த அந்த பணிப்பெண் மூன்று திருட்டு குற்றச்சாட்டுகளில் இரண்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அன்று அவருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு பணிப்பெண் வேலைக்கு எடுக்கப்பட்டார், வீட்டு வேலை செய்வாரோ இல்லையோ திருடுவதையே வேலையாக வைத்திருந்துள்ளார் அவர்.

முதலாளியிடம் பிடிபடும்போதெல்லாம் மன்னிப்பு கேட்டு, கெஞ்சி கூத்தாடி தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார் பணிப்பெண்.

திருந்தாத பணிப்பெண், 2021 நவம்பர் மாதம் தனது முதலாளியின் படுக்கையறைக்குள் பதுங்கி சென்று வளையல் மற்றும் $2,000 மதிப்புள்ள வைர நெக்லஸைத் திருடினார்.

அந்த வைர நெக்லஸ் அணிந்தபடியே டிக்டாக்கில் வீடியோ ஒன்றையும் பணிப்பெண் பதிவேற்றி பிடிபட்டார்.

பொறுமை காத்த முதலாளிக்கே துரோகம் செய்த பணிப்பெண் தற்போது சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?