சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் (LKY100) 100வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக S$10 நாணயம் வெளியானது.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள வங்கிகள்:
- DBS வங்கி / POSB வங்கி
- Oversea-Chinese Banking Corporation Limited
- United Overseas வங்கி
- Bank of China
- Citibank Singapore Limited (நடப்பு/சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்)
- HSBC வங்கி
- Industrial and Commercial Bank of China Limited Singapore Branch
- Maybank Singapore Limited
- Standard Chartered வங்கி
பங்கேற்கும் வங்கிக் கிளைகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்த விரிவான பட்டியல் அறிய: https://go.gov.sg/lky100coin-bankbranches
சுமார் 700,000 க்கும் மேற்பட்ட LKY100 நாணயங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று MAS தெரிவித்துள்ளது.
LKY100 நாணயங்களை பெறவிரும்புவோர் NRIC-யை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
வெளிநாட்டவர்கள், பாஸ்போர்ட் அல்லது வேலை அனுமதிகளை கொண்டு செல்ல வேண்டும் என MAS நினைவூட்டியது.
சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்