சூதாட்டம் தொடர்பான நடவடிக்கை: ஏழு பேர் கைது – 49 பேர் மீது விசாரணை

Singapore Police Force

சூதாட்டம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 49 பேர் விசாரணையில் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 21க்கும் இடையில் மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் அந்த சந்தேக நபர்கள் பிடிபட்டனர் என்று இன்று (டிசம்பர் 1) செய்தி வெளியீட்டில் போலீசார் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனிதவளத் தேவை – அதிகரித்த வேலைவாய்ப்பு

கடந்த அக்டோபர் 29 அன்று நோரிஸ் சாலையில் (Norris Road) உள்ள ஒரு கடைவீட்டில் முதல் சோதனை தொடங்கியது. அங்கு 37 முதல் 67 வயதுக்குட்பட்ட 11 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

“போக்கர் கார்டுகள் போன்ற சூதாட்டம் தொடர்பானவை கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும், காமன் கேமிங் ஹவுஸ் சட்டத்தின்கீழ், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் மற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல, சிங்கப்பூரின் COVID-19 விதிமுறைகளின் கீழ் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியது தொடர்பாக அனைவரும் விசாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு டிச. 1 முதல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள்!