GE2020: 61.24% வாக்குகளுடன் அமோக வெற்றி; ஆட்சி அமைக்கும் மக்கள் செயல் கட்சி..!

GE2020: PAP wins with 61.24% of vote
GE2020: PAP wins with 61.24% of vote. Photo: Ministry of Communications and Information (MCI)

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்த தேர்தலில், ஆளுங்கட்சி 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. கடந்த பொதுத் தேர்தலை ஒப்பிடுகையில் மக்கள் செயல் கட்சி வாக்கு விகிதம் சரிவை கண்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த மேலும் சுமார் 30 இடங்களின் பட்டியல்..!

அதாவது மக்கள் செயல் கட்சி 2015ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்கு விகிதம் 69.9 சதவீதம் ஆகும்.

பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய போதிலும், மக்கள் செலுத்திய வாக்குகளின் சதவீதம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை என்பதை பிரதமர் லீ சியென் லூங் ஒப்புக் கொண்டார்.

இருப்பினும், முடிவுகள் PAPக்கு பரந்த அடிப்படையிலான ஆதரவை பிரதிபலிக்கின்றன என்று திரு லீ, செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

COVID-19 மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க இந்த ஆட்சியை பொறுப்புடன் செயல்படுத்துவேன் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg